Wednesday 28 March 2012

நேசம்+யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி முடிவுகள்


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளில் பகிரவேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளில் விதிமுறைகளுக்கு உடபட்டு டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த கட்டுரைகள் பரிசு பெறுகின்றன.





ஆறுதல் பரிசு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தக கூப்பன்

பதிவர் திருமதி ஜலீலாகமால் வின்  புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும் இந்த கட்டுரை சற்றே பெரிது எனினும் பெண்களுக்கு வரும் புற்றுநோயின் தீவிரம் குறித்து அலசப்படுவதால் ஆறுதல் பரிசை பெறுகின்றது.


பதிவர் திரு. இன்னம்பூரான் எஸ்.சௌந்திரராஜனின் பசுமரத்தாணி - இந்த கட்டுரை ஆறுதல் பரிசை கட்டுரையின் தகவல் செறிவு பிழையின்மை ஆகியனவற்றிக்காக பெறுகிறது

மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் ஆறுதல் பரிசை பெறுகின்றன. வாழ்த்துகள்



மூன்றாம் பரிசு - 2000 ரூபாய் 

பதிவர் திரு. ரத்னவேல்- கட்டுரை - ஆண்களுக்கான மார்பு புற்றுநோய்

ரத்னவேல் அவர்களின் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த கட்டுரை மூன்றாம் பரிசை பெறுகிறது. கட்டுரையின் செறிவும் தகவலும் நன்று. எனினும் இது அவர் சொந்த படைப்பு அல்ல என்பது மூன்றாம் பரிசுக்குகாரணம். எழுதிய டாக்டர் கே.முருகானந்தம் அவர்களுக்கு நன்றி

இரண்டாம் பரிசு -3000 ரூபாய்

பதிவர் திரு கதிரவன் -கட்டுரை - புற்றுநோய் ஒரு பார்வை 

கதிரவனின் கட்டுரை தேவையான அனைத்து தகவல்களையும் விழிப்புணர்வையும் ஒருங்கே கொண்டு இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறது.

முதல் பரிசு - ரூபாய் 5000.


பதிவர் திருமதி ஹுசைனம்மாவின் கட்டுரை மிக எளிதாக தேவையான விழிப்புணர்வுடன், படங்களுடன் அதன் சுட்டிகளுடன் இருப்பதால் அவரின் இரண்டு கட்டுரைகளும் முதல் இடத்தை பகிர்கின்றது.

கட்டுரை 1வருமுன் காப்போம் 
கட்டுரை 2 - நம்மை நாமல்லாது வேறாராறிவார்?




போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். உங்களில் நேரில் வந்து விழாவில் கலந்து கொண்டு பரிசை பெற இயலுபவர்கள் தயவுசெய்து நேரில் வந்து கலந்து கொள்ளூங்கள். இயலாதவர்கள் தங்கள் பரிசை அனுப்பவேண்டிய முகவரியை தெரிவிக்கவும்.



நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் குறும்பட போட்டிகள் குறித்து


நேசம் அமைப்பினர் எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு குறும்படங்கள் வராததால் இந்த போட்டி பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும். தற்சமயம் வந்திருந்த குறும்படங்களில் சிறப்பானதாக கருதப்படும் அனந்துவின் குறும்படமும், கோவை விக்னேஷின் குறும்படமும் நேசம் பரிசளிப்பு விழாவில் திரையிடப்படும். இவை இரண்டுமே பின்னர் அறிவிக்கப்படும் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.




நன்றி


11 comments:

  1. பரிசினை வென்ற கட்டுரைகளுக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள். BETTER LUCK NEXT TIME.

    ReplyDelete
  2. சிறப்பான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ஹூசைனம்மா, ஜலீலா ப‌ரிசு பெற்றது மகிழ்வைத் தருகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வென்றவர்களுக்கும் உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  6. ஹூசைனம்மா, ஜலீலாக்கா ப‌ரிசு பெற்றது மகிழ்வைத் தருகிறது. அவர்களுக்கும் போட்டியில் வென்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கட்டுரை போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் , பங்கு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ... இதே போல குறும்பட போட்டிக்கான பரிசை அறிவிக்காமல் போனதில் மிகுந்த வருத்தமே , ஏனெனில் அது ஒரு கூட்டு உழைப்பு ... அதே நேரத்தில் எனது குறும்படத்தை திரையிடுவதற்கு மனமார்ந்த நன்றிகள் ....

    ReplyDelete
  8. நேசம் குழுவினருக்கு நன்றி.வாழ்த்தியவர்களுக்கும் எனது நன்றிகள்!!

    ReplyDelete
  9. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. என் கட்டுரையை தேர்ந்தெடுத்த டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ அவர்கள் தேர்ந்தெடுத்த இருவருக்கும் என் நன்றி + நேசம் மற்றும் உடான்ஸ் குழுவினர்களுக்கும் மிக்க நன்றி + சந்தோஷம்.

    இங்கு அன்புடன் வாழ்த்திய தோழ தோழியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete